ETV Bharat / state

திருமாவளவன் பேனர் கிழிப்பு: தருமபுரியில் பரபரப்பு

author img

By

Published : Feb 14, 2019, 11:48 AM IST

தருமபுரி: மாதே மங்கலத்தில் விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் படம் போட்ட திருமண வாழ்த்து பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Thirumavalavan

தருமபுரி அருகே உள்ள மாதே மங்கலம் கிராமத்தில் பார்த்தசாரதி - தாரணி என்பவர்களுக்கு கடந்த 10-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதற்காக அவரது உறவினர்கள் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் படங்கள் உள்ளிட்ட திருமண வாழ்த்துப் பேனர்களை சாலையோரத்தில் வைத்திருந்தனர்.

அந்த பேனரை மூன்று பேர் சேர்ந்த மர்மகும்பல் கிழித்து விட்டதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தனர்.

ஆனால், புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் இன்று காலை மாதே மங்கலம் - மிட்டாரெட்டிஹெள்ளி சாலையில் வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து, பேனரை கிழித்தவர்களை உடனடியாக கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தருமபுரி வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், அதியமான் கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து காலை 10 மணியளவில் சாலை மறியலை கைவிட்டனர்.

வி.சி.பேனர் கிழிப்பு நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் தர்மபுரி,                            தர்மபுரி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் படம் போட்ட திருமண வாழ்த்து பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அச் சமுதாய மக்கள் சாலைமறியல் செய்தனர்.தர்மபுரி அருகே உள்ளது மாதே மங்கலம் கிராமம் .இந்த கிராமத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி -தாரணி என்பவர்களுக்கு கடந்த 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதற்காக அவரது உறவினர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்உள்ளிட்ட படங்கள் போட்ட திருமண வாழ்த்து பேனர்களை மாதே மங்கலத்தில் சாலையோரத்தில் வைத்துள்ளனர் .அதனை மாற்று சமுதாயத்தை சேர்ந்த 3 பேர் கிழித்து விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அதியமான்கோட்டை போலீசில் அச் சமுதாய மக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் புகாரை பெற்றுக் கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது .இதனால் ஆத்திரமடைந்த ஒரு பிரிவினர் திருமாவளவன் படம் அச்சிட்ட பேனரை கிழித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இன்று காலை மாதே மங்கலம் -மிட்டாரெட்டிஹெள்ளி சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரி தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் அதியமான் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் பேனர் கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து 10 மணி அளவில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.