தர்மபுரி மாவட்டதைச் சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவருக்கு சகோதர உறவு கொண்டவர் சஞ்சய் என்ற இளைஞர். இவர், மாணவியிடம் சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திவந்துள்ளார். ஆனால், கல்லூரி மாணவி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த சஞ்சய், காதலிக்க மறுத்தால் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவதாகவும், வீட்டிற்கே நேரில் வந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால், பயந்துபோன கல்லூரி மாணவி, இது குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.
உடனடியாக பெற்றோர் இச்சம்பவம் குறித்து தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சஞ்சயை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெண் குரலில் பேசி ரூ.1.35 கோடியை சுருட்டிய மேட்ரிமோனி மோசடி ஆசாமி..!