தருமபுரி: அரூர் அடுத்த சித்தேரி பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சிலர் கடந்த நவம்பர் மாதம் ஆந்திராவுக்கு கூலி வேலைக்குச் சென்றனர். அதில் ராமன், பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தனர். இவர்கள் செம்மரம் வெட்டுவதாகக் கூறி ஆந்திர வனத் துறையினரால் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் 2015ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு கூலி வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் 20 பேர் படுகொலைசெய்யப்பட்டனர். இதில் ஏழு பேர் சித்தேரி மலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரூரில் உள்ள அண்ணா சிலை முன்பு இன்று (டிசம்பர் 31) உயிரிழந்த ராமன், பாலகிருஷ்ணன் குடும்பத்தினருடன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, "உயிரிழந்த கூலித்தொழிலாளர்கள் ராமன், பாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு 15 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
கூலி வேலைக்காக மலைவாழ் மக்களை அழைத்துச் சென்று செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடவைக்கும் இடைத்தரகர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். நூற்றுக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் ஆந்திர சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" எனக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: Powerloom Owners go on Strike: விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு