ETV Bharat / state

தருமபுரியில் 1 லட்சத்து 35 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ வழங்கல்! - Vitamin A for children

தருமபுரி: மாவட்டத்தில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ வழங்கும் பணி தொடங்கியது.

தருமபுரி
தருமபுரி
author img

By

Published : Aug 28, 2020, 2:18 PM IST

தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை சார்பில் வைட்டமின் ஏ வழங்கும் முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெற்றுவருகிறது. இன்று மதிகோண்பாளையம் பகுதியில் நடைபெற்ற முகாமில் குழந்தைகள், பெற்றோருக்கு முகக்கவசம் வழங்கி கிருமிநாசினி தெளித்து குழந்தைகளுக்கு ஏ வைட்டமின் திரவம் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வரை முகாம்கள் நடைபெற உள்ளது. 6 மாத குழந்தை முதல் 5 வயது வரை உள்ள ஒரு லட்சத்து 35 ஆயிரம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.

வைட்டமின் ஏ திரவம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படுகிறது. வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுவதால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, அறிவுக்கூர்மைக்கு உதவும். ஏ வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படும் கண்பார்வை குறைபாடு, மாலைக்கண் நோய், கண்பார்வை இழப்பு போன்ற பாதிப்புகள் தடுக்க வைட்டமின் ஏ சத்து மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள பெற்றோர்கள் தங்கள் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ஏ வைட்டமின் திரவத்தை அருகாமையில் உள்ள அரசு அங்கன்வாடி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

ஏ வைட்டமின் முகாம்களை மாவட்ட சுகாதாரத் துறை மருத்துவர்கள் பார்வையிட்டு ஆய்வுசெய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: 'எட்டுத்திக்கும் ஒலித்த பறை ஒலி' ஊரடங்கு காலத்திலும் அங்கீகாரத்திற்காக போராடும் திருநங்கைகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.