தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அய்யாசாமி. இவரின் மூத்த மகன் அண்ணாமலை சொத்துத் தகராறு காரணமாக நேற்று முன்தினம் (ஏப்ரல் 7) இரவு தாக்கியதில் அய்யாசாமி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையைத் தேடிவந்தனர். இந்நிலையில் நீண்ட தேடுதலுக்குப் பின் பாலக்கோடு காவல் துறையினர் அண்ணாமலையைப் பிடித்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
சொத்துக்காகத் தந்தையை மகன் கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படும்- பள்ளிக் கல்வி துறை அறிவிப்பு!