ETV Bharat / state

அண்ணாவின் சொற்கள் அடங்கிய முகக்கவசம் - செந்தில்குமார் எம்பி பெருமிதம் - செந்தில்குமார் எம்பி

தர்மபுரி: திராவிட பாரம்பரியத்தை சார்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்வதாக தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறினார்.

mp
mp
author img

By

Published : Oct 15, 2020, 2:40 PM IST

Updated : Oct 15, 2020, 2:53 PM IST

திமுகவை சேர்ந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரான செந்தில்குமார், தான் பங்கு கொள்ளும் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில், ’I BELONG TO THE DRAVIDIAN STOCK’ என பெயர் பொறித்த முகக்கவசம் அணிந்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். ’நான் திராவிட பாரம்பரியத்தைச் சார்ந்தவன்’ எனப் பொருள்படும் இந்த முகக்கவசத்துடனேயே, இன்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

இது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், “ இந்த முகக்கவசத்தை முதன் முதலில் வடிவமைத்து அணிந்தவர் உதயநிதி ஸ்டாலின். அவரை நான் சந்தித்தபோது எனக்கு அவர் வழங்கியதுதான் இந்த முகக்கவசம். இதில் இருக்கக்கூடிய சொற்றொடரை கூறியவர் பேரறிஞர் அண்ணா. முதல் முதலாக நாடாளுமன்றத்தில் அவர் பேசும்போது, முதல் வாக்கியமாக அவர் இதைத்தான் பேசினார்.

அண்ணாவின் சொற்கள் அடங்கிய முகக்கவசம் - செந்தில்குமார் எம்பி பெருமிதம்

திராவிட மாநிலங்களான தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை தனது தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும். நானும் இந்த தென் பகுதியை சேர்ந்தவன் என்பதோடு, இந்த முகக்கவசத்தை அணிவதால் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இதேபோல் நாம் அனைவரும் திராவிட பாரம்பரியம், பெரியாரின் சித்தாந்தத்தை எடுத்துச் சென்றால்தான் சமூக நீதியை காக்க முடியும் “ என்று பெருமிதத்துடன் கூறினார்.

இதையும் படிங்க: முரளிதரன் ஒரு இனத்துரோகி, 800 படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் - பாரதிராஜா கடிதம்

Last Updated : Oct 15, 2020, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.