தர்மபுரி: பாலக்கோடு அருகே கும்மனூர் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 81 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தூய்மைப்பணியாளர்கள் இல்லாததால், பள்ளி மாணவர்களே கழிவறைக்கு நீர் எடுத்துச்சென்று பள்ளி மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்டப் பணிகளை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
வீடியோவில், கீழ்தள தண்ணீர்த் தொட்டியில் பள்ளி மாணவா்கள் ஆபத்தான முறையில் தண்ணீரை குடத்தில் எடுத்துக்கொண்டு, பள்ளியில் உள்ள கழிவறையில் ஊற்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மாணவா்கள் தொட்டியில் விழுந்தால் உயிரிழக்கும் அபாயம் உள்ள தண்ணீா்த் தொட்டியில் ஆபத்தை உணராமல் தண்ணீா் கொண்டு செல்கின்றனா். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெற்றோர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எஸ்ஐ தொல்லை கொடுக்கிறார்... தற்கொலைக்கு முயன்ற மூவரிடம் போலீஸ் விசாரணை