ETV Bharat / state

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு - தருமபுரியில் பரபரப்பு! - மருத்துவர் முரளிதரன்

Wrong Treatment In a Private Hospital: அரூர் அருகே காய்ச்சல் பாதித்த இளைஞருக்கு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்து உயிரிழந்ததாகக் கூறி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Wrong Treatment In a Private Hospital
தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை இளைஞர் உயிரிழப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 11, 2023, 8:08 AM IST

Updated : Oct 11, 2023, 8:31 AM IST

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

தருமபுரி: அரூர் அடுத்த சூரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகரசன் மகன் கிரி என்பவர், அருகில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கிரிக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், அரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, இரண்டு நாட்கள் தொடர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார்.

இந்நிலையில், நேற்று (அக்.10) மீண்டும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து உள்ளார். அப்பொழுது, மருத்துவர் சிகிச்சை அளிக்காமல், அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரூர் அரசு மருத்துவமனையில் கிரியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பிய நிலையில், மீண்டும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டபோது தனியார் மருத்துவமனை மருத்துவர் முரளிதரன், சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

மேலும், இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றும், முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் இளைஞர் உயிரிழந்து விட்டார் எனக் கூறி, கிரியின் உறவினர்கள் அரூர் அரசு மருத்துவமனை முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தனியார் மருத்துவமனை மீதும், மருத்துவர் முரளிதரன் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர் இதனை அறிந்த காவல் துறையினர் மற்றும் அரூர் வட்டாட்சியர் பெருமாள் உள்ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

உயிரிழந்த இளைஞரின் கிராமத்தில் சிலருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதால், சிறப்பு மருத்துவ முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இதனையடுத்து, சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் தருமபுரி - அரூர் பிரதான சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் காய்ச்சல் பாதிப்பால் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அரூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணா கூறுகையில், “தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். ஆனால் நேற்று மீண்டும் காய்ச்சல் பாதிப்பு இருந்ததால், கிராமத்தில் உள்ளவர்களிடம் ஊசி போட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு வந்தபோது, ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறைந்ததால், மருத்துவர் முரளிதரன் அரசு மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தி சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார். நேற்று இரவு இது போன்ற புகார்கள் எழுந்தவுடன் மருத்துவரிடம் விசாரணை செய்து, மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து உள்ளோம்.

மேலும், காய்ச்சல் பாதிப்பு ஏற்படும்போது மக்கள் கிராமப் பகுதிகளில் இருப்பவர்களிடம் சிகிச்சைக்குச் செல்லாமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று பரிசோதித்து, பாதிப்புக்கு ஏற்றவாறு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க:“அரசியல் காரணங்களுக்காகவே திரித்து பதிவிட்டுள்ளார்” - அமித் மாள்வியா விவகாரத்தில் தமிழக அரசு பதில்!

Last Updated : Oct 11, 2023, 8:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.