ETV Bharat / state

மீண்டும் ரஜினி அரசியல் பிரவேசத்தை ஊக்குவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

author img

By

Published : Nov 1, 2020, 1:28 PM IST

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Rajini kanth political entry: fans promoting Posters again in dharmapuri

தமிழ்நாட்டில் வரும் 2021ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சிகயும் தங்களை தயார்ப்படுத்திக்கொண்டுவருகின்றன. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துவருகின்றனர். இதற்கிடையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்தும், அரசியல் நிலைப்பாடு குறித்தும் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை தன்னுடையது அல்ல என்றும், ஆனால், தன்னுடைய உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்கள் அனைத்தும் உண்மை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் முடிவெடுப்பதாகவும் அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் அவரது அரசியல் பிரவேசத்திற்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு மாவட்டங்களில் சுவரொட்டிகளை ஒட்டி வந்தனர்.

மேலும், விஜயதசமி நாளன்று கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்த்த ரஜினி ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் ரஜினி கட்சி தொடங்க வேண்டுமென வலியுறுத்தும் விதமாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், " ஓட்டுன்னு போட்டா தலைவர் ரஜினிக்குதான்" , "வா தலைவா வா" போன்ற வசனங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த சுவரொட்டிகள், தருமபுரி எஸ்.வி.ரோடு. தருமபுரி நகரப் பேருந்து நிலையம் .நான்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

ரஜினிகாநத் அரசியல் கட்சி தொடங்க நிர்ப்பந்தம் செய்யவே இது போன்ற சுவரொட்டிகளை ரசிகர்கள் ஒட்டி வருவதாக மாற்றுக் கட்சியினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.