தர்மபுரி: கடந்த இரு வாரங்களாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது.
மழையின் காரணமாக பாலக்கோடு, பென்னாகரம், வெள்ளிச்சந்தை, மாரண்டஹள்ளி உள்ளிட்டப் பகுதிகளில் தக்காளி பழங்களில் வெடிப்பு ஏற்படுவதால், தக்காளியின் வரத்து கடுமையாக குறைந்துள்ளது.
தக்காளிப் பழங்களில் வெடிப்பு ஏற்படுவதன் காரணமாக, கடந்த மூன்று தினங்களாக தக்காளியின் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.
இரண்டே நாளில் விலை உயர்வு
இருபது ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி இரண்டே நாளில் 50 ரூபாய்க்கு விற்பனையாகும் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
பாலக்கோடு தக்காளிச் சந்தையில் கிலோ தக்காளி 40 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. 15 கிலோ கொண்ட ஒரு கூடைத் தக்காளி 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகிறது.
கொள்முதல் செய்யும் இடத்திலேயே விலை கூடியதால், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் தக்காளி விலை கிலோ 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது.
தக்காளியில் வெடிப்பு ஏற்பட்டு வீணாவதால், விவசாயிகளும் கடும் நஷ்டம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை;பொதுமக்கள் அதிர்ச்சி!