ETV Bharat / state

தனியார் மருத்துவமனைகளின் அட்டூழியம்: மருத்துவக் கழிவுகளால் மக்கள் வேதனை - கரோனா மருத்துவ கழிவுகள்

தனியார் மருத்துவமனைகள் இரவு நேரங்களில் ராமக்காள் ஏரி அருகே மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மருத்துவக் கழிவு
மருத்துவக் கழிவு
author img

By

Published : Jun 1, 2021, 2:42 PM IST

தருமபுரி: ஏரி அருகே மருத்துவக்கழிவுகளைக் கொட்டும் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இம்மாவட்ட நகரப்பகுதியில், 100-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்திய ஊசிகள், மருந்துகள், ரத்தக்கரை படிந்த பஞ்சுகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள், கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்போது மருத்துவர்கள் பயன்படுத்திய கவச உடைகள் என இவை அனைத்தும், தருமபுரி நகரப்பகுதியை ஒட்டியுள்ள ராமக்காள் ஏரியின் அருகே இந்து சமய அறநிலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் இரவு நேரங்களில் வீசிவிட்டு செல்லப்படுகிறது.

மருத்துவக் கழிவுகளால் மக்கள் வேதனை

அங்கு வீசப்பட்ட மருத்துவக் கழிவுகள் மலைபோல் குவிந்துள்ளதால் அப்பகுதியில் ஒருவிதமான துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் தொற்று நோய்ப் பரவும் வாய்ப்பு இருப்பதாக அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள கால்நடைகள் ஏரிகளுக்கு தண்ணீர் குடிக்கச் செல்லும்போது கால்நடைகளில் கால்களில் ஊசிகள் குத்துகின்றன.

அதேசமயம் இந்த மருத்துவக் கழிவுகளைத் தெரியாமல் சாப்பிட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இப்பகுதியில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தள்ளனர்.

இதையும் படிங்க: முன்களப் பணியாளர்களுக்கு பாஜக சார்பில் நிவாரண பொருட்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.