தருமபுரி மாவட்டம் நல்ல பள்ளியைச் சேர்ந்தவர்கள் மதன்குமார், வினோ என்கிற ரித்திக் ரோஷன் , ஆதிசேஷன் . இவர்கள் மூன்று பேரையும் ஏற்கனவே ஒரு வழக்கில் அதியமான் கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். அதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி தினந்தோறும் அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வர வேண்டும்.
அதன்படி கையெழுத்து போட்டு வரும் பொழுது காவல் நிலையத்தில் இருந்து வெளியே வருவதுபோல் டிக்டாக் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பியுள்ளனர்.
இதுகுறித்து நேற்று போலீசார் அழைத்து மூவரையும் விசாரித்ததில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல்துறையினரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர்.
அதனடிப்படையில் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.