தர்மபுரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பல பள்ளிகளில் மாணவ, மாணவியர் உட்கார முறையான இருக்கைகள் இல்லாததால் அவர்கள் தரையிலேயே அமர்ந்து பாடங்கள் படித்து வருகின்றனர்.
மழை காரணமாக பள்ளியின் தரை மிக குளிர்ச்சியாக காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதில் காலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால், பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்துகொண்டே பள்ளிக்கு வருகின்றனர்.
குளிர்ந்த தரையில் அமர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகள்
அவ்வாறு பள்ளிக்கு வருபவர்கள் குளிர்ச்சியான தரையில் அமர்ந்து படிப்பதால் மாணவ-மாணவியருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. சில பெற்றோர் மிதியடிகளை தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுத்து அதன் மீது உட்கார்ந்து படிக்க அறிவுறுத்தியுள்ளனர்.
![v](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-school-chillness-problam-vis-tn10041_10112021125201_1011f_1636528921_876.jpg)
மழை காலங்களில் பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியருக்கு அமர்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்துகொடுக்க வேண்டுமென்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் கோடிக்கணக்கில் செலவழித்து அரசு புதிய கட்டடங்களைக் கட்டி கொடுத்தாலும்; அங்கு பயிலும் மாணவ மாணவியருக்கு முறையான இருக்கை வசதிகளையும் ஏற்படுத்தாதது வேதனையளிப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வாயா.. நீ என் ஏறியாவுக்கு வாயா..தப்பித்து ஓடிய கைதி!