ETV Bharat / state

வெங்காயம் விலை திடீர் உயர்வு!

author img

By

Published : Oct 10, 2020, 10:32 AM IST

தருமபுரி: மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததன் காரணமாக வெங்காய விலை திடீரென உயர்ந்துள்ளது.

வெங்காயம்
வெங்காயம்

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கு பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் வெளி மாநிலங்களிலிருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டுவருகின்றன.

தற்போது பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாயாகவும், சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 60 ரூபாயாகவும் விற்பனையாகின்றன.

இது குறித்து வெங்காய வியாபாரிகள் தெரிவிக்கும்போது, "கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்துள்ளது.

விளைச்சல் குறைவு காரணமாக வெங்காய வரத்து கடும் சரிவை சந்தித்துள்ளது. வியாபாரிகள் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதால் இந்த விலை உயர்வு இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும்" என்றனர்.

வெங்காயம்
வெங்காயம்

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறிய வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் மலர், காய்கறி சாகுபடியில் ஈடுபட்டதால் உள்ளூர் விவசாயிகள் சிறிய வெங்காயம் பயிரிடுவதை தவிர்த்தனர். இதனால் சின்ன வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.