ETV Bharat / state

ரத சப்தமியை முன்னிட்டு சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய சீனிவாச பெருமாள்

author img

By

Published : Jan 28, 2023, 11:13 AM IST

அதகப்பாடி ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி திருக்கோயிலில் ரத சப்தமி விழாவை முன்னிட்டு சூரிய பிரபை வாகனத்தில் சீனிவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய சீனிவாச பெருமாள்

தருமபுரியில் ரத சப்தமியை முன்னிட்டு சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய சீனிவாச பெருமாள்

தருமபுரி: அதகப்பாடி கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீலட்சுமி நாராயண சாமி திருக்கோயிலில் ரத சப்தமி விழாவை முன்னிட்டு அதிகாலையில் மூலவர், லட்சுமி, நாராயணருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

சூரிய பிரபை வாகனத்தில் சீனிவாச பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கோயிலில் இருந்து புறப்பட்டு கோபுரத்தின் முன்புறம் சூரிய உதயத்தின் போது வழிபாடு நடைபெற்றது. சீனிவாச பெருமாள் முன்பு சூரியன் தோன்றிய போது பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் திருக்காட்சியை கண்டு பரவசமடைந்தனர்.

சீனிவாச பெருமாள் கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சீனிவாச பெருமாள் ரத சப்தமி நாளில் கோயிலில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. தரிசனத்திற்கு பின்னர் பக்தர்களுக்கு பொங்கல் புளியோதரை பிரசாதமாக வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆன்மீகப் பணியற்றிவரும் அருண் மற்றும் அதகபாடி கிராம மக்கள், ஆன்மீக அன்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதையும் படிங்க: திட்டத்தை குறித்த காலத்திற்குள் செயல்படுத்தாதது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு - ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.