தருமபுரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் என தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் தங்கி சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தற்பொது கரோனா வைரஸ் தொற்றுச் சிகிச்சைக்கென தனிமைப்படுத்தப்பட்ட பிரிவு தருமபுரி அரசுமருத்துவக்கல்லுரியில் செயல்பட்டு வருகிறது.
இங்கு சிகிச்சைப் பெறுபவா்கள் ஆரோக்கியத்திற்காக, தருமபுரி அரசு மருத்துவக்கல்லுரியில் செவிலியராக பணியாற்றும் கவிதா ரமேஷ் என்பவர், அவரதுச் சொந்தப் பணத்திலிருந்து 4 ஆயிரத்து 500 முட்டையை இலவசமாக மருத்துவக்கல்லுரி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து, மீள தினமும் முட்டை சாப்பிட வேண்டும் என அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் ஊட்டச்சத்து நிறைந்த முட்டையை வழங்கிய செவிலியரை மருத்துவர்கள் வியந்துப் பாராட்டினர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு: பொய் சொல்லிட்டு ஊரு சுத்த முடியாது, அதுக்கு வந்துட்டு ஆப் மூலம் ஆப்பு!