தர்மபுரி: கடந்த ஓராண்டு காலமாக தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட 32வது வார்டு பகுதியில் கொசு மருந்து தெளிக்கவில்லை என கூறி, அப்பகுதி பொதுமக்கள் அம்மாவட்ட திமுக மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் ட்விட்டர் பக்கத்தில் புகார் பதிவு செய்தனர்.
அதில், “அன்னசாகரம் 32வது வார்டில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. கொசு மருந்து அடித்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிறது நகராட்சி கொசு மருந்து தெளிப்பது இல்லை. கொசு மருந்து தெளித்து மக்களை காப்பாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
-
தருமபுரி அன்னசாகரம் 32வார்டில் கொசு தொல்லை கொசு மருந்து அடித்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிறது. நகராட்சி மருந்து அடிப்பது இல்லை கொசு மருந்து அடித்து மக்களை காக்க வேண்டும். @mkstalin @DD_IAS @DrSenthil_MDRD
— fmgopal Reporter (@fmgopal) August 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தருமபுரி அன்னசாகரம் 32வார்டில் கொசு தொல்லை கொசு மருந்து அடித்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிறது. நகராட்சி மருந்து அடிப்பது இல்லை கொசு மருந்து அடித்து மக்களை காக்க வேண்டும். @mkstalin @DD_IAS @DrSenthil_MDRD
— fmgopal Reporter (@fmgopal) August 4, 2021தருமபுரி அன்னசாகரம் 32வார்டில் கொசு தொல்லை கொசு மருந்து அடித்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிறது. நகராட்சி மருந்து அடிப்பது இல்லை கொசு மருந்து அடித்து மக்களை காக்க வேண்டும். @mkstalin @DD_IAS @DrSenthil_MDRD
— fmgopal Reporter (@fmgopal) August 4, 2021
கொசுத் தொல்லை
இப்பதிவில் தமிழ்நாடு முதலமைச்சர், தர்மபுரி மாவட்ட ஆட்சியர், தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் என்பவர்களின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு பதிவு செய்திருந்தனர்.
இதனை அறிந்த தர்மபுரி எம்பி செந்தில்குமார், உடனடியாக நகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு கொசு மருந்து தெளிக்க கோரியிருந்தார். இதையடுத்து 32வது வார்டு பகுதியில் நகராட்சி பணியாளர்கள் கழிவுநீர், கால்வாய்கள், தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் எந்திரங்கள் மூலம் கொசு மருந்து தெளித்தனர்.
இதன் பின்னர், நடவடிக்கை எடுத்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாருக்கு தங்களது நன்றி என கூறி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை