தென்னகத்தின் நயாகரா என அழைக்கப்படும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்துக்கு சாதா நாட்களிலேயே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். சில நாட்களாக ஒகேனக்கல் காட்டுப் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு வரக்கூடிய நீரின் அளவு 900 கன அடியாக அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், கோடை விடுமுறை நாளையோடு முடிவதால் மக்கள் கூட்டம் ஒக்கேனக்கலுக்கு படையடுத்துள்ளது. இங்கு, அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், பரிசல், மீன் உணவு முதலைபண்ணை என சுற்றுலா பயணிளுக்கு இயற்கையான பகுதிகளில் நேரம் கழிக்க ஏதுவாக இந்த சுற்றுலா தளம் அமைந்துள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். நீர்வீழ்ச்சியில் குளித்தும், தொங்குபாலத்தில் நீர்வீழ்ச்சியின் இயற்கை அழகை ரசித்தும், பரிசல் படகில் குடும்பத்துடன் சவாரி செய்தும், புகைப்படங்கள் எடுத்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ந்து வருகின்றனர்.