தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "கடந்தாண்டை விட இந்தாண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கு அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இன்னும் விண்ணப்பம் செய்ய கால அவகாசம் உள்ளது.
விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து பத்து ஆயிரத்து 577 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்திவிட்டனர். 27 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் உள்ள சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், "ஊரடங்கு காரணமாக கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வழங்கும் முறை மாற்றப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு கலை அறிவியல் கல்லூரிகளில் இதுவரை மூன்று லட்சத்து 16 ஆயிரத்து 795 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 494 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்" எனத் தெரிவித்தார்.
நிறைவாக அவர், “இந்தாண்டு முதல் பொறியியல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பிடித்த கல்லூரியைத் தேர்வு செய்து கொள்ளலாம்” என்றுக் கூறினார்.
மேலும் அவர், “மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் சேவை மையங்கள் மூலம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக அவர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒகேனக்கல் உபரி நீர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'முன்னேறி செல்ல சீர்திருத்தமே ஒரே வழி'- பிரதமர் நரேந்திர மோடி!