தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மறையூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது உறவினரான விஜயகுமார் என்பவர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளார்.
மேலும் தன்னை போல 12 பேரை அவர் ஏமாற்றி, அவர்களிடமிருந்து ரூ.74 லட்சம் வரை பறித்ததாக ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.21) புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறுகையில், “ அரூர் சட்டப்பணிகள் உதவி மைய இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார்.
இவர், நீதிமன்றத்தில் படித்த படிப்பிற்கு ஏற்ப தோட்டக்காரர், அலுவலக உதவியாளர் பணி பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.
இதனை நம்பி ஒரு ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் பெற்று ஆறரை லட்சம் ரூபாய் வரை அவரிடம் வழங்கினேன். ஆனால் அவர் போலியான நியமன ஆணை வழங்கி ஏமாற்றி விட்டார். இதே போல இவர் 12 நபர்களையும் ஏமாற்றியுள்ளார். கிட்டத்தட்ட இவர் ரூ. 74 லட்சத்தை எங்களிடம் பறித்துள்ளார். எனவே மோசடி செய்த விஜயகுமார் மீது நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க: போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்! - மாணவி, தந்தை பாஸ்போர்ட்டை முடக்க திட்டம்!