தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(40), இவரிடம் அதேப் பகுதியை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பாலமுருகன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் கட்டினால் நாளொன்றுக்கு ரூ.514ரூபாய் தருவதாகவும், மாதம் ஒன்றுக்கு 15 ஆயிரத்து 435 ரூபாய் ஈட்டலாம் என கூறியுள்ளார். இதனை நம்பிய வேல்முருகன் பணத்தை கட்டியுள்ளார். அனால் பணத்தை பெற்றுக்கொண்டு பாலமுருகன் இழுத்தடித்தோடு ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வேல்முருகன் இது குறித்து மாரண்டஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து மோசடி செய்த வேல்முருகன் உள்ளிட்ட 11பேரை காவல்துறையினர் கைது செய்து ரொக்கத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த ஆன்லைன் மோசடியில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி உள்ளது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.