ETV Bharat / state

Dharmapuri: நீர் தேக்கத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுவன் - பின்னணி என்ன? - 6 year boy found dead near dharmapuri

தருமபுரி அருகே, இரு தினங்களுக்கு முன் காணாமல் போன 6 வயது சிறுவன் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுவனின் மரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சடமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுவன்
சடமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுவன்
author img

By

Published : Jul 18, 2023, 10:57 PM IST

Dharmapuri: நீர் தேக்கத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுவன் - பின்னணி என்ன?

தருமபுரி: காட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவரது ஆறு வயது மகன் மதியரசு. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாலை 6 மணி அளவில் சிறுவன் மதியரசுவை காணவில்லை என அவரது பெற்றோர் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அப்புகாரின் அடிப்படையில் கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, சிறுவன் மதியரசை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சிறுவன் மதியரசு காட்டம்பட்டி பகுதியில் தண்ணீர் இன்றி காலியான நிலையில் இருந்த குடிநீர் தொட்டியில் இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கிருஷ்ணாபுரம் காவல் துறையினர் தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தினங்களுக்கு முன் காணாமல் போன சிறுவன், தற்போது காலியான நிலையில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சிறுவன் மதியரசை நரபலி கொடுப்பதற்காக யாராவது கடத்தினார்களா அல்லது சிறுவனின் மரணத்தின் பின்னணியில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என கிருஷ்ணாபுரம் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போதையால் பறிபோன உயிர் - முதல் மாடியில் இருந்து குதித்த இளைஞர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.