தருமபுரியில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், எம்ஜிஆர் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். மறைந்த ஜெயலலிதா மூன்று முறை வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். தற்போது எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்துவருகிறார்.
ஆட்சிக்கு எந்த விதக் கெட்ட பெயரும் இல்லாமல் ஆட்சியை நடத்தி வருகிறார். இதேபோன்று 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவதற்கு தருமபுரி அதிமுக நிர்வாகிகள் பாடுபட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: வில்சன் கொலை வழக்கில் கைதான 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்!