தருமபுரி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக அன்னசாகரம் பகுதியில் வசிக்கும் மக்கள், வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு , எருமை போன்ற கால்நடைகளை ஒன்றுசேர்த்து ஊர் மையப் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
இந்தத் கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு வழிபாட்டை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திவருகின்றனர். இதில், சுமார் 500க்கும் மேற்பட்ட கால்நடைகள் பங்கேற்றன.
இதையும் படிங்க: பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த காளைகள் 26 பேர் காயம்!