தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள அடிலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தனும் (70) கூலித் தொழில் செய்துவருகின்றனர்.
இவர்கள் இருவரும் நேற்று (நவ. 08) மாந்தோப்பில் மது அருந்தினர். மது போதை மிகுதியால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆத்திரமடைந்த கோவிந்தன் திடீரென தான் மறைத்துவைத்திருந்த அரிவாளால் முருகேசனின் முகம், தோள்பட்டை பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகேசனை துடிதுடித்துள்ளார்.
உடனடியாக அவரை, அவரது உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் தற்போது ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். அதற்குள் கொலை செய்த கூலித் தொழிலாளி கோவிந்தன் காரிமங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். பிறகு காவல் துறையினர் அவரைச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அகவிலைப்படியை உயர்த்தக் கோரி அரசு ஊழியர்கள் சாலை மறியல்!