மக்கள் அதிகாரம் அமைப்பினர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநாடு நடத்தவுள்ளனர். இந்த மாநாட்டிற்கு, அவ்வமைப்பைச் சேர்ந்த கோபிநாத்(35), சிவா(36), அன்பு(24) ஆகிய மூன்று பேரும் தருமபுரி நான்கு ரோடு அருகே வைத்து ஆட்டோ ஓட்டுநர் மணி என்பவரிடம் தாங்கள் நடத்தவுள்ள மாநாட்டிற்கு நிதி கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு தன்னிடம் பணம் இல்லையென்று தெரிவித்த மணியை, இந்த ஏரியாவுல ஆட்டோவ ஓடவிட மாட்டோம், உன் கை கால்களை உடைத்துவிடுவோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர். இதில் பயந்துபோன ஆட்டோ ஓட்டுநர் மணி மற்றும் அவரது நண்பர்கள் இதுகுறித்து தருமபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த அந்த மூவர் மீதும் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன் பின்பு அம்மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் - பாமக தீர்மானம்!