ETV Bharat / state

வாச்சாத்தி மலைக்கிராம மக்களுக்கு எதிராக நடந்த வன்முறை; செப்.29ஆம் தேதி தீர்ப்பு! - தருமபுரி மாவட்ட செய்திகள்

Vachathi case: தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராம மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் செப். 29ஆம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 10:54 PM IST

தருமபுரி: வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் குடியிருப்புகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த கிராமத்தில் இருந்த இளம்பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆண்களை கடுமையாகத் தாக்கி பொருட்களை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், 4 ஐ.எப்.எஸ் அதிகாரிகள் உள்பட 124 வனத்துறையினர், 86 காவல் துறையினர், 5 வருவாய்த்துறையினர் என 215 பேர் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இந்நிலையில், தீர்ப்பு வழங்குவதற்கு முன் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களையும், அப்பகுதியையும் நேரில் ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.

அதன்படி, கடந்த மார்ச் 4ஆம் தேதி சம்பவம் நடந்த வாச்சாத்தி மலைக்கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்தார். வாச்சாத்தி மலைக்கிராமத்தில் இருந்து கலசப்பாடி, அரசநந்தம் உள்ளிட்ட மலைக்கிராம மக்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் நேரடியாக விசாரணை செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி வேல்முருகன் நாளை மறுநாள் (செப்.29) தீர்ப்பு வழங்க உள்ளார்.

இதையும் படிங்க:தொடர் விடுமுறை; பலமடங்கு உயர்ந்த விமான பயணக் கட்டணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.