தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே காவலர்கள் சோதனைச் சாவடி அமைத்து ட்ரோன் கேமரா மூலம் வாகனங்களை கண்காணித்து வந்தனர். அப்போது கேமராவில் விபத்துக்காட்சி பதிவாகியுள்ளது. அதில், தருமபுரியிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரி ஒன்று முன்னால் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக மோதியது.
அதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் தூக்கி வீசப்பட்டனர். அதையடுத்து அவர்களை படுகாயங்களுடன் அருகிலிருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து, காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளானவர்களின் பெயர் ராணி மற்றும் சுவாமிநாதன் என்பதும் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. லாரி ஓட்டுநரை தீவிரமாக காவல்துறையினர் தேடிவரும் நிலையில், விபத்துக்குறித்தக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சொந்த ஊர் திரும்புகையில் விபரீதம்: லாரி கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு!