குஜராத் மாநிலத்திலிருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு ஆக்சிஜன் சிலிண்டரை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த அகிலேஷ்(52) என்பவர் லாரியை ஒட்டிவந்துள்ளார்.
அப்போது தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக லாரி சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை சாலையோர மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த 54 சிலிண்டர்கள் சாலையில் விழுந்தது. சாலையின் இரு பகுதிகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்தது சென்ற தொப்பூர் காவல் துறையினர், சுங்கச்சாவடி பணியாளர்கள், தீயணைப்புத் துறையினர் ஒன்றிணைந்து சாலையின் இருபுறமும் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பாதுகாப்புடன் மீட்டு அப்புறப்படுத்தினர்.
இந்த விபத்தில் சிக்கிய ஓட்டுநர் அகிலேஷை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
லாரி விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றது.