ETV Bharat / state

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கைது

தருமபுரி: மாரண்டஹள்ளி அருகே அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

Eeswaran arrested
Kongunadu Makkal national party
author img

By

Published : Dec 12, 2020, 2:37 PM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தென்பெண்ணை ஆற்றில் இருந்து தூள் செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரும் கிளை வாய்க்கால் திட்டத்தை விரைவுப்படுத்த வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாரண்டஹள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவித்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்தனா்.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை காவலர்கள் கைது செய்தனர்.

செய்தியாளரிடம் பேசிய ஈஸ்வரன் "நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சேதத்தை முழுமையாக கணக்கெடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் போதிய இழப்பீடு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

ரஜினி கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. திமுக கூட்டணி பலமாக உள்ளது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெறும்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.