ETV Bharat / state

'கரோனாவால் தருமபுரியில் உயிரிழப்பு ஏற்படவில்லை'- அமைச்சா் கே.பி. அன்பழகன் - அமைச்சா் கே பி அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு

தருமபுரி: அரசு மருத்துவக் கல்லுரியில் 12 ஆயிரம் நபா்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

K P Anbalagan press meet about corona in Dharmapuri

author img

By

Published : May 28, 2020, 6:53 PM IST

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகள் கொண்ட மகப்பேறு தாய்-சேய் நல கட்டடப் பணிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சாய் எஜுகேஷனல் ட்ரஸ்ட் சார்பில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரண்டு வென்டிலேட்டர் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கரோனா பரிசோதனை மையத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 12,462 பேருக்கு இதுவரை கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தருமபுரியில் மட்டும் 7,363 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 8 நபர்களுக்கு தொற்று உறுதியானது. அவர்களில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். தருமபுரியில் கரோனா பாதிப்பு இறப்புகள் ஏதும் நிகழவில்லை. கரோனா தடுப்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன.

கரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனைகள் இயங்காத நிலையிலும் கடந்த 2 மாத காலமாக அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு பிரசவங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இச்சமயங்களில், பிரசவ காலத்தில் கர்ப்பிணிகளின் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 5,060 சதுர மீட்டர் அளவில் 10 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த மகப்பேறு தாய்-சேய் நல கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டட பணிகள் விரைவாக நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கடந்த நவம்பர் மாதம் முதல் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற பிரசவங்களில் மருத்துவர்களின் சிறப்பான செயல்பாடு காரணமாக உயிரிழப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த சிறப்பான செயல்பாட்டிற்கு தருமபுரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பரிசு வழங்கி சிறப்பித்துள்ளது" என்றார். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி உடனிருந்தார்.

இதையும் படிங்க... 'அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து; உயர்மட்டக் குழு முடிவு செய்யும்' - அமைச்சர் கே.பி. அன்பழகன்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.