ETV Bharat / state

ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கிய இஸ்லாமிய சகோதரர்கள் - Lunch for poor and humble people in Dummapuri

தருமபுரி: மொரப்பூர் பகுதியில் ஜாமியா மஜித் சார்பாக 2 ஆயிரம் ஏழை, எளியவருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மதிய உணவு வழங்கிய  ஜாமியா மஜித்
மதிய உணவு வழங்கிய ஜாமியா மஜித்
author img

By

Published : Apr 18, 2020, 6:41 PM IST

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக மே 3 ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால், மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். மேலும் ஆதரவற்றவர்கள், வயது முதிர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் உணவின்றித் தவித்து வருகின்றனர்.

இதுபோன்று உணவின்றித் தவிக்கும் ஏழை, எளியோர், வயதானவர்கள், ஆதரவற்றவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உணவு, பண உதவிகளை செய்து வருகின்றனர்.

மதிய உணவு வழங்கிய ஜாமியா மஜித்
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஜாமியா மஜித் சார்பாக 2 ஆயிரம் ஏழை, எளியோருக்கு மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது. மொரப்பூர் பகுதியில் உள்ள அரசு அலுவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவலர்கள், ஆதரவற்றோர் - முதியோர் இல்லவாசிகள், கூலித் தொழிலாளர்கள், வயது முதிர்ந்தவர்கள் என அனைவருக்கும் மதிய உணவும், தண்ணீர் பாட்டில்களையும் வழங்கினர்.

இதையும் படிங்க: சொன்னது போலவே உதவிய மாவட்ட நிர்வாகம்’ - நன்றி நவிழும் பழங்குடியினர்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.