ETV Bharat / state

Hogenakkal falls water level increased: ஒகேனக்கல்லில் குளிக்க தடை

ஒகேனக்கலில் (Hogenakkal falls) நீர்வரத்து 48 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பால், ஆற்றங்கரையோரங்களில் (cauvery river) குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

குளிக்க தடை
குளிக்க தடை
author img

By

Published : Nov 15, 2021, 5:15 PM IST

தர்மபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் (hogenakkal cauvery river) நீர்வரத்து மூன்றாவது நாளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்தின் காவிரி கரையோர பகுதிகள் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவிரி கரையோர பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 48 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாகவும் மாலை 30 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. ஒகேனக்கல் மெயின் அருவி (Hogenakkal falls), சினியருவி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

மெயின் அருவிக்கு செல்லும் பகுதியில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர்வரத்து அதிகரிப்பால் ஐவர் பவனி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

இதையும் படிங்க: பெட்ரோலுக்குப் பதிலாக டீசல்: பெட்ரோல் பங்கில் தீப்பற்றி எரிந்த கார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.