தர்மபுரி: காவிரி நீர் பிடிப்புப்பகுதிகள் மற்றும் தமிழ்நாடு எல்லைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவின் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 18,933 கன அடி தண்ணீரும் கபினி அணையிலிருந்து 800 கன அடி தண்ணீரும் என மொத்தம் 19,733 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து காவிரி கரையோரப்பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்டப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டி வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் நான்காவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு