தர்மபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நான்கு நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கலுக்கு இன்று (ஆக.27) 20 ஆயிரம் கன அடி நீர் வரத்து அதிகரித்துள்ளது. மொத்தமாக 70 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அத்துடன் கிருஷ்ணராஜ சாகர் கபினி அணையிலிருந்து 28 ஆயிரம் கன அடி தண்ணீர் உபரியாக காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுளஅளது. பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: கோவையில் கனமழை...தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்த வெள்ளம்