சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் நாட்டில் இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மது விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளத்தனமாக சாராயம் உள்ளிட்டவற்றை காய்ச்சிவருகின்றனர்.
அந்தவகையில் தருமபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள காந்தி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் கள்ளத்தனமாக ஒயின் உற்பத்தி செய்வதாக நகர காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அந்தப்பகுதியில் ஏழாவது தெருவில் வசித்து வரும் ராஜா, ராஜ்குமார் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
சோதனையில் யூ டியூப் பார்த்து கள்ளத்தனமாக வீட்டில் வைத்து ஒயின் தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து ஒவ்வொரு வீட்டிலும் தலா 100 லிட்டர் ஒயினை காவல் துறையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய இரு காவலர்கள் பணியிடை நீக்கம்!