தர்மபுரி: மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஒன்றியங்களில் 2,246 பயனாளிகளுக்கு 2,77,00,000 மதிப்பிலான அரசு நலத்திட்டங்களைச் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
தர்மபுரி ஒன்றியத்தில் உள்ள 855 நபர்களுக்கு ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 754 நபர்களுக்கு 87 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும் அரசு நலத்திட்ட உதவிகளை பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி வழங்கினார்.
இதையும் படிங்க: கலகலக்கும் வண்ணமிகு அரக்கு வளையல்கள்