ETV Bharat / state

ஒகேனக்கல்லில் தூய்மை பணிகள் தொடக்கம்..!

தருமபுரி: ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் சிதறிக் கிடக்கும் குப்பைகளை தூய்மை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

ஓகேனக்கல் தூய்மை பணி தொடக்கம் ஓகேனக்கல் தூய்மை பணி தூய்மை பணி ஓகேனக்கல் Hogenakkal Cleaning Works Starts Hogenakkal Cleaning Works Cleaning Works Hogenakkal
Hogenakkal Cleaning Works
author img

By

Published : Feb 25, 2020, 2:27 PM IST

தருமபுரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது ஒகேனக்கல். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பது, ஆயில் மசாஜ், படகு சவாரி செய்வது மட்டுமின்றி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தல், தோஷம் கழித்தல் உள்ளிட்டவைகளை செய்துவருகின்றனர்.

இவ்வாறு திதி, தோஷம் உள்ளிட்ட பூஜையில் பயன்படுத்திய பொருட்களை ஆற்றில் கரைப்பதும் ஆற்றங்கரையோரம் வீசி எறிந்து செல்வதையும் சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் துணி, பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 25 டன் குப்பைகள் ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன.

இந்நிலையில், ஒகேனக்கல் பகுதியை தூய்மையான பகுதியாக மாற்ற மெகா தூய்மைப் பணி பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று தொடங்கியது. இத்தூய்மைப் பணியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

ஓகேனக்கல் தூய்மை செய்யும் பொதுமக்கள்

இதைத் தொடர்ந்து, மசாஜ் தொழிலாளர்கள், மீன் உணவு சமைப்பவர்கள், விடுதி உரிமையாளர்கள் என ஏராளமோனோர் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் ஆடைகளை ஆற்றில் தூக்கி வீசாமல் அதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பகுதியில் சேர்த்தால் ஒகேனக்கல் பகுதி எப்போதும் தூய்மையான பகுதியாக காட்சியளிக்கும்.

ஆகையால் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவுமாறு இப்பகுதி பொதுமக்களும், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வேன் மீது பைக் மோதி விபத்து: சம்பவ இடத்திலே இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.