தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு லட்சத்து 80 ஆயிரம் கன அடி நீர் வந்தது. இந்நிலையில், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இறங்கி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோவில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரண்டு லட்சம் கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது ஆனால் தருமபுரி மாவட்டத்தில் குடிநீருக்கும் விவசாயத்திற்கும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அரசியல்வாதிகள் ஒகேனக்கல் நீர் திட்டத்தைச் செயல்படுத்தி விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு வர வழி செய்ய வேண்டும்.
அரசியல்வாதிகள் பணம் சம்பாதிப்பது மட்டும் குறிக்கோளாக இல்லாமல் மக்களுக்கு இது போன்ற நலத்திடங்களையும் செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது தருமபுரி பகுதியில் வைரலாகி வருகிறது.