ETV Bharat / state

விசிக தலைவர் திருமாவுக்குச் சவால்விடுத்த இந்து மக்கள் கட்சி!

கிருஷ்ணகிரி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஐயர் சமூகத்தைச் சார்ந்த ஒருவரை தலைவராகவோ, செயலாளராகவோ திருமாவளவன் நியமனம் செய்வாரா என இந்து மக்கள் கட்சியின் தேசிய துணைத் தலைவர் லோகேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindu People's Party protest
Hindu People's Party protest
author img

By

Published : Dec 21, 2020, 11:20 AM IST

Updated : Dec 21, 2020, 5:34 PM IST

இந்து மக்கள் கட்சி அகில பாரத அனுமன் சேனா அமைப்பின் சார்பில் ஓசூர் ராம்நகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து தலைவர்களின் படுகொலையைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, இந்து மக்கள் கட்சியின் தேசிய துணைத் தலைவர் லோகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ”தமிழ்நாடு அரசு லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா கட்சியை இழிவாகப் பேசிய திருமாவளவன், வேல்முருகன் இருவரையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

திருமாவளவனுக்கு ஒரு சவால்விடுகிறோம். அவர் கட்சியில் முக்கியப் பதவியில் ஐயர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மாநிலத் துணைச் செயலாளர் பதவி வழங்குவாரா? அவ்வாறு வழங்கிவிட்டு தேசிய ஒற்றுமை குறித்து பேசட்டும். தேவையற்ற விமர்சனங்களை எழுப்பி இந்து மக்கள் மனதை காயப்படுத்துவது கண்டனத்துக்குரியது" என்று கூறினார்.

இதையும் படிங்க: காசிமேடு துறைமுக விசைப்படகில் திடீர் தீ விபத்து!

Last Updated : Dec 21, 2020, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.