தருமபுரி தாலுகாவிற்கு உட்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, இலக்கியம்பட்டி செந்தில் நகர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கலந்துகொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, அம்மா இருசக்கர வாகனம், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிதி உதவிகள் என அரசு நலத் திட்டங்களில் பயன்பெறும் 319 பயனாளிகளுக்கு, 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ஆண்களை விடப் பெண்கள் இருசக்கர வாகனங்கள் அதிவேகமாக ஓட்டி வருவதைப் பார்க்க முடிகிறது. எனவே பெண்கள் தலைக்கவசம் அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தைக் கவனமாகவும் மெதுவாகவும் ஓட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.