இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆயுதபூஜையில் வைக்கப்படும் சாம்பல் பூசணி தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் இந்த பூசணியை வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து பெங்களூர் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த மூன்று வாரங்களாக தருமபுரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, வழக்கத்தைவிட இந்த ஆண்டு சாம்பல் பூசணி அதிக மகசூலை தந்துள்ளது. ஒரு பூசணிகாயின் எடை 2 கிலோவிலிருந்து தொடங்கி 8 கிலோ வரை பெரிதாக காய்த்து நல்ல மகசூலை தந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். மூன்று மாத பயிரான இந்த சாம்பல் பூசணி சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்க: