சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 94ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. வ.உ.சிதம்பரனாரின் நண்பரான சுப்பிரமணிய சிவா சுதந்தர போராட்டத்தின்போது ஆங்கில அரசுக்கு எதிராக போராடியதால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு தொழுநோய் ஏற்பட்டதையடுத்து விடுதலையானார். அதன்பின், பாரத மாதா கோயில் அமைக்க நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார்.
பாரத மாதா கோயில் அமைப்பதற்காக வாங்கிய நிலத்தில் அவரது உடலை அடக்கம் செய்தனர். அவரின் நினைவு இடத்தை தமிழ்நாடு அரசு மணிமண்டபமாக அமைத்துள்ளது.
இந்நிலையில், அவரது நினைவு தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, தியாகி சுப்பிரமணிய சிவாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.