சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதிக்கு உள்பட்ட ஆலம்பாடி பகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொன்முடி என்பவர் உரிய ஆவணங்களின்றி ஒரு லட்ச ரூபாய் பணம் கொண்டு சென்றது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், அதனை தேர்தல் நடத்தும் அலுவலர் தணிகாச்சலத்திடம் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட பணம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க:அரவக்குறிச்சியில் வாக்கு சேகரித்த பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை