தருமபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கள்ளத்தனமாக சந்தையில் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து. தீவிர பரிசோதனை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், தருமபுரி நகரப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்த வடமாநில இளைஞர்களை தருமபுரி நகர காவல் துறையினா் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் தடை செய்யப்பட்ட 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா, ஹான்ஸ், பான்பராக் போன்ற புகையிலைப் பொருள்களைப் பதுக்கி மொத்த வியாபாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஷிக்காராம்(34), கால்யூசிங்(42), அசோக் குமார்(23), பவாராம்(20), கைலாஷ்(25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், இவர்களிடம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் எங்கிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்படுகிறது என விசாரணை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.