தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாரத் பெட்ரோலிய நிறுவனம் கோவை இருகூர்- பெங்களூர் தேவனகொந்தி வரை எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தைகைவிடக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் எண்ணெய் குழாய் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர் வரை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது.
எண்ணெய் குழாய்களை விளை நிலத்தின் வழியாக கொண்டுச் செல்லும் போது குழாய்களின் அருகே மரம் வளர்ப்பது ஆழ்துளை கிணறுகள் அமைப்பது போன்றவை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்கள் வழியாக குழாய் அமைக்கப்படுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் விவசாய நிலங்கள் பாதிக்காத அளவில் எண்ணெய் குழாய்களை சாலையின் ஓரத்தில் கொண்டுச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க:விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் அமைக்க எதிர்ப்பு; விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்