தருமபுரி: முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் நேற்று (ஜனவரி 20) காலை முதல் 16 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவுபெற்றது. இதனையடுத்து கே.பி. அன்பழகன் செய்தியாளரைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “எனது வீட்டிலிருந்து எந்தப் பணமோ, பொருளோ, நகையோ, ஆவணமோ கைப்பற்றப்படவில்லை. இதனைச் சோதனை நடத்திய அலுவலர்கள் எழுதி, கையொப்பமிட்டு கொடுத்துள்ளனர்.
திமுக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்தும், அதில் நடந்த முறைகேடு குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். இதில் நடந்த ஊழலை திசை திருப்பவே எனது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது” என்றார்.
இதையும் படிங்க: தலை சுற்றும் கேட்டால்... பங்குகளாக சொத்துகள் குவித்த முன்னாள் அமைச்சர்