ETV Bharat / state

ஒகேனக்கலில் சட்டமன்ற குழு: மக்களுக்காக எம்எல்ஏ வைத்த கோரிக்கை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 36 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தால் கூட பார்க்க அனுமதிக்க வேண்டும் பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்

ஒகேனக்கலில் 36 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தால் கூட மக்களை பார்க்க அனுமதிக்க வேண்டும்

author img

By

Published : Nov 9, 2022, 4:47 PM IST

தருமபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குழுவின் தலைவர் கோவி.செழியன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒகேனக்கல் பகுதி ஆய்வு செய்தனர்.

இக்குழுவில் இடம்பெற்றுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி 'ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 20ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தால் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

இதனால் இங்குள்ள தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாவைக்கொண்டாட வரும் சுற்றுலாப்பயணிகள் பாதிக்கப்படுவதால் 36ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தால்கூட பொதுமக்கள் ஒகேனக்கல் மெயின் அருவி பார்வையிடுவதற்கு மட்டும் அனுமதிக்க வேண்டும்.

மேலும் மெயின் அருவிக்குச் செல்லும் வழியை தற்போது உள்ள அளவில் இருந்து உயர்த்தி பாதை அமைத்தால் 36 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தால்கூட, சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றையும் மெயின் அருவியையும் பார்க்க முடியும்' என்று பேரவை குழுவிடம் வலியுறுத்தினார்.

தொடர்ந்து இக்குழுவினர் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். சட்டப்பேரவை மனுக்கள் குழு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் வெள்ளாளப்பட்டி ஏரிப்பகுதியில் நீரேற்றும் முறையில் தண்ணீர் கொண்டு செல்லும் பணியினைப் பார்வையிட்டனர்.

ஒகேனக்கலில் சட்டமன்ற குழு: மக்களுக்காக எம்எல்ஏ வைத்த கோரிக்கை

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைச்செயலாளர் சீனிவாசன், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் மதியழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: மருத்துவக் கல்லூரி மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.