தர்மபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கடந்த மூன்று தினங்களாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. கடந்த வாரம் கர்நாடகத்தின் காவிரி கரையோர பகுதிகள் மற்றும் தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 லட்சத்து 45 ஆயிரம் கன அடி வரை அதிகரித்தது.
காவிரி கரையோர பகுதிகளில் மழைப்பொழிவு கடந்த இரு தினங்களாக குறைந்ததை அடுத்து நீர்வரத்து படிப்படியாக குறைந்து மூன்றாவது நாளாக ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக உள்ளது. கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல் பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. அருவிகள் மற்றும் பாறைகளை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 30ஆவது நாளாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் குளிக்க மற்றும் பரிசல் இயக்க தடை விதித்துள்ளது.
இதையும் படிங்க: தனியார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் ரூ.11 லட்சம் திருட்டு - சிசிடிவி உதவியுடன் போலீஸ் விசாரணை