தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அஜ்ஜினஅள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதனிடையே அப்பகுதிக்கு பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் இன்பசேகரன் தனது வாகனத்தில் அங்கு சென்றார். இதற்கு அப்பகுதியிலுள்ள பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் நடைபெறும் இடத்திலிருந்து திமுக எம்எல்ஏ இன்பசேகரன் வெளியேறுமாறு கோஷமிட்டனா். அதன் காரணமாக திமுகவினருக்கும் பாமகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதற்கிடையே ஆவேசமான பாமகவினர் திமுக எம்எல்ஏ இன்பசேகரன் கார் மீது கல் வீசி தாக்கியதில், காரின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதையடுத்து திமுகவினர் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பசுமை புரட்சி செய்யும் விவசாயி பாஸ்கர் - ஆயுள் தரும் விவசாயிக்கு மக்கள் பாராட்டு